தனியார்மயமாகும் புதுச்சேரி மின்துறை!? காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள்!

தனியார்மயமாகும் புதுச்சேரி மின்துறை!? காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள்!
தனியார்மயமாகும் புதுச்சேரி மின்துறை!? காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள்!

புதுச்சேரி மாநில மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்காலில் மின்துறை ஊழியர்கள்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மின்துறை தனியார் மையம் ஆக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதற்கு மின்துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் உள்ள மின் துறையை தனியார்மயத்துக்கான டெண்டர் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில முழுவதும் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் காரைக்காலில் மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு தலைமை அலுவலகம் வாயில் முன்பு 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மின் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது இதனை சீரமைக்க மின்துறை ஊழியர்கள் வராததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com