“தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள்”- பிரதமர் மோடி வலியுறுத்தல்

“தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள்”- பிரதமர் மோடி வலியுறுத்தல்

“தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள்”- பிரதமர் மோடி வலியுறுத்தல்
Published on

தீபாவளி நேரத்தில் உள்ளூர் தயாரிப்புகளுக்கு பொதுமக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 

தனது மக்களவை தொகுதியான வாரணாசியில் நிறைவேற்றப்பட்டுள்ள 614 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்துவைத்தார். அப்போது பேசிய பிரதமர், தீபாவளி காலத்தில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்கலாம் என்றார்.

வெறும் விளக்குகளை மட்டுமல்ல, அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் வாங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com