நாட்டு சாராயம் அருந்தி ஆழ்ந்து உறங்கிய யானைக் கூட்டம் ! - எப்படி நடந்தது?

நாட்டு சாராயம் அருந்தி ஆழ்ந்து உறங்கிய யானைக் கூட்டம் ! - எப்படி நடந்தது?
நாட்டு சாராயம் அருந்தி ஆழ்ந்து உறங்கிய யானைக் கூட்டம் ! - எப்படி நடந்தது?

ஒடிசாவில், பழங்குடியின மக்கள் தயாரிக்கும் நாட்டு சாராயத்தை தண்ணீர் என நினைத்து குடித்து, 20-க்கும் மேற்பட்ட யானைகள் போதையில் விடிய விடிய தூங்கிக் கொண்டிருக்கின்றன. பிறகு வனதுறையினர், மேளம் அடித்து அவற்றை விழிக்க வைத்தனர்.


ஒடிசாவில் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர், நாட்டு மதுபானம் தயாரிப்பதற்காக மஹுவா பூக்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்துள்ளனர். இதை பானைகளில் ஊற்றி தண்ணீரை புளிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் புளிக்க வைக்கப்பட்ட பானைகளை எடுத்து, மதுபானம் தயாரிக்க வனப்பகுதிக்கு பழங்குடியினர் சென்றபோது, அங்கு பானைகள் அனைத்து உடைக்கப்பட்டு, மஹுவா பூக்களை போட்டு ஊற வைக்கப்பட்டிருந்த தண்ணீரும் காணாமல் போனதைக் கண்டனர்.

குழப்பத்தில், சற்று அங்கம்பக்கத்தில் சுற்றி பார்த்தப் போது, அவர்களின் மதுபானத்தை யானை கூட்டங்கள் தான் குடித்துள்ளது என்பது புரிந்துள்ளது. மொத்தம் 24 யானைகள் மஹுவா பூக்கள் போட்டு ஊறவைத்த புளித்த நீரை அருந்திவிட்டு மணிக்கணக்கில் ஆழ்ந்து தூங்கியதாக கூறப்படுகிறது.


கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள ஷிலிபாடா முந்திரி காடு அருகே வசிக்கும் பழங்குடி மக்கள், மஹுவா பூக்களை ஊற வைத்து மதுபானம் தயாரிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். 


இதுகுறித்து கிராமவாசிகள் கூறுகையில், ‘ காலை 6 மணியளவில் நாங்கள் மஹுவா பானம் தயாரிப்பதற்காக காட்டுக்குள் சென்றோம். அப்போது அங்கு அனைத்து பானைகளும் உடைந்திருப்பதையும், புளிக்கவைக்கப்பட்ட தண்ணீரைக் காணாமல் போனதையும் கண்டோம். கூடவே யானைகள் தூங்குவதையும் கண்டோம். அப்போது புரிந்தது, காய்ச்சிய தண்ணீரை யானைகள் குடித்துவிட்டன. மதுபானம் பதப்படுத்தப்படாமல் இருந்தது. யானைகளை எழுப்ப முயற்சித்தோம். ஆனால் அவைகள் நல்ல உறக்கத்தில் இருந்ததால் எழுப்ப முடியவில்லை. பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தோம்'' என்றனர்.

‘யானைகளை எழுப்புவதில் சிரமம் இருந்தது. மேளங்கள் அடித்து தான் எழுப்பினோம். பின்னர், யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. ஆனால் யானைகள் மஹுவா பானத்தை குடித்ததா என்று உறுதியாக கூறமுடியாது. ஒருவேளை அவைகள் சாதரணமாக கூட ஓய்வுவெடுத்து உறங்கி கொண்டிருந்திருக்கலாம்’ என வனக்காப்பாளர் காசிராம் பத்ரா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com