சாலையிலேயே நிகழ்ந்த யானையின் பிரசவம்.. தொந்தரவு செய்யாமல் காத்திருந்த வாகன ஓட்டிகள்

சாலையிலேயே நிகழ்ந்த யானையின் பிரசவம்.. தொந்தரவு செய்யாமல் காத்திருந்த வாகன ஓட்டிகள்
சாலையிலேயே நிகழ்ந்த யானையின் பிரசவம்.. தொந்தரவு செய்யாமல் காத்திருந்த வாகன ஓட்டிகள்

கேரள மாநிலம் மறையூர் அருகே யானையொன்று சாலையிலேயே குட்டி யானையை பிரசவித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறையூரிலிருந்து தமிழகத்தின் உடுமலைப்பேட்டை பகுதியை இணைக்கும் மலைப்பாதையில் யானை ஒன்று நகராமல் நின்றுகொண்டிருந்தது. அச்சம் காரணமாக வாகனங்களை சாலையில் நிறுத்தியபடி ஓட்டுநர்கள் காத்திருந்தனர். நீண்ட நேரம் நகராமல் இருந்ததால் சந்தேகமடைந்த வாகன ஓட்டுநர்கள் அருகில் சென்று பார்த்தபோது யானை, குட்டியை ஈன்றது தெரியவந்தது. 

குட்டியை அழைத்துக்கொண்டு தாய் யானை காட்டுக்குள் செல்லும்வரை, ஒருமணிநேரத்திற்குமேல் இருப்பக்கமும் வாகனங்கள் காத்திருந்தன. இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. யானை பிரசவிப்பதற்காக வாகன ஓட்டிகள் தொர்ந்தரவு செய்யாமல் காத்திருந்த சம்பவம் நெட்டிசன்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com