மின்சாரம் இல்லாமல் எரியும் பல்ப் - அதிசய ‘லைட் மனிதர்கள்’
தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் உடலில் மின்விளக்கை வைத்தால் ஒளிர்வது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேக் சாந்த் பாஷா. இவர் கடந்த வாரம் தனது வீட்டில் இருந்த மின்விளக்கு செயலிழந்ததால் கடைக்குச் சென்று புதிய மின்விளக்கை வாங்கி வந்துள்ளார். அந்த மின்விளக்கை வைத்து அவரது வீட்டில் இருந்த 7 வயதான மகன் சமீர் மற்றும் அவரது மகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் கையில் வைத்திருந்த பொழுது மின்சாரம் இல்லாமல் மின்விளக்கு ஒளிர்ந்துள்ளது. இதனைக் கண்டு ஆச்சரியம் அடைந்த ஷேக் சாந்த் தனது உடலிலும் சோதனை செய்துள்ளார். அப்போதும் மின்விளக்கு ஒளிர்ந்துள்ளது.
இந்தத் தகவல் அந்த ஊர் முழுவதும் பரவியதால் அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இது எவ்வாறு நிகழ்கின்றது என அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். அனைவரின் உடலிலும் மின்சாரம் இருக்கும் என்றும், உடலில் ஈரப்பதம் இல்லாத நேரத்தில் அவை தெரியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.