\
அக்.4-ல் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல்

அக்.4-ல் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல்

அக்.4-ல் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல்
Published on

புதுச்சேரியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் என்.கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அந்தப்பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த என்.கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து அந்தப்பதவிக்கான தேர்தல் அக்டோபர் 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தத் தேர்தலை நடத்தும்படி அதிகாரிகளை , தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com