கர்நாடக சட்டப்பேரவைக்கு மே12ல் தேர்தல்

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே12ல் தேர்தல்
கர்நாடக சட்டப்பேரவைக்கு மே12ல் தேர்தல்

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் இதனைத் தெரிவித்தார். வேட்புமனுத்தாக்கல் எப்ரல் 17ஆம் தேதி தொடக்கம். மே12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே15ஆம் தேதி நடைபெறும். அன்றைய தேதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. 

மேலும் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர், “கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுடன் தயாராக உள்ளது. புகைப்படத்துடன் வாக்குச்சாவடி சீட்டு அனைவருக்கும் ஒரு வாரம் முன்பே வழங்கப்படும். வாக்குச்சீட்டு விவரங்கள் மாநில மொழியான கன்னத்திலும் அச்சடிக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்குரிமையை செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்காளர்களுக்கு உதவி செய்ய அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உதவி மையம் அமைக்கப்படும்.
மின்னணு இயந்திரங்களுடன் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதற்கான விவிபிடி இயந்திரம் இணைக்கப்படும். தேர்தல் விதிமுறைகளை மீறாமல் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்படும்” என்றார்

வேட்பாளர்களின் தேர்தல் செலவாக ரூ.28 லட்சம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.வேட்பாளர்களின் செலவினத்தைக் கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கர்நாடக பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதால், நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன எனத் தெரிவித்தார்.

வாக்குரிமையை பயன்படுத்த அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொண்டுள்ளது.தேவையான வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் பாரபட்சமற்ற, நடுநிலையாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் பாரபட்சமாகவோ, ஒருதலைபட்சமாகவோ செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com