‘பிரதமர் மோடி’ திரைப்படம் வெளியாகுமா ? - இன்று முடிவை கூறும் தேர்தல் ஆணையம்

‘பிரதமர் மோடி’ திரைப்படம் வெளியாகுமா ? - இன்று முடிவை கூறும் தேர்தல் ஆணையம்

‘பிரதமர் மோடி’ திரைப்படம் வெளியாகுமா ? - இன்று முடிவை கூறும் தேர்தல் ஆணையம்
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கலாமா ? என்பது குறித்த தனது முடிவை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கவுள்ளது.

விவேக் ஒபராய் நடிப்பில் உருவாகியுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்கை வரலாறு திரைப்படத்தை, மக்களவைத் தேர்தல் முடியும் வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் டிரைலரை மட்டும் பார்த்து தடை செய்யும் முடிவை தேர்தல் ஆணையம் எடுத்திருப்பதாக வாதிட்டனர். 

இதனால் திரைப்படத்தை முழுமையாக பார்த்துவிட்டு தடை செய்வது குறித்து முடிவு செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் தேர்தல் ஆணையத்திற்காக கடந்த புதன்கிழமை திரையிடப்பட்டது. அதன்பின்னர் நேற்று திரைப்படக்குழுவினர் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர். இந்த நிலையில் திரைப்படத்தை தடை செய்வது குறித்த தங்கள் முடிவை சீலிட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் இன்று தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்கவுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com