தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் நியமனம்! அதிரடி அறிவிப்பின் பின்னணி இதுதான்!

5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் பிரசாரங்களை மேற்கொள்ள ஏதுவாக சச்சின் நியமிக்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு, மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு, பிரசார பணிகள் உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.

குறிப்பாக, மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதுபோல் தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதியும் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளம் ஆக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் பிரசாரங்களை மேற்கொள்ள ஏதுவாக சச்சின் நியமிக்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ரங் பவன் ஆடிட்டோரியத்தில் அவரை தேசிய அடையாளம் ஆக அங்கீகரிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com