congress launches campaign urging people to register votes
ராகுல் காந்திpt web

’வாக்குத்திருட்டு’ என்பது இந்திய வாக்காளர்கள் மீதான தாக்குதல்.. தேர்தல் ஆணையம் அறிக்கை!

வாக்குத்திருட்டு போன்ற மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது கோடிக்கணக்கான இந்திய வாக்காளர்கள் மீதான தாக்குதல் என, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Published on

சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அண்மையில் சுமத்தினார்.

மகாராஷ்ட்ரா, ஹரியானாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும், கர்நாடக பேரவைத் தேர்தலிலும் வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாக அவர் குற்றஞ்சாட்டினார். இயந்திரம் மூலம் படிக்கக் கூடிய வகையில் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சில தரவுகளுடன் முன்வைத்த ராகுல் காந்தி, பாஜகவுக்காக தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டில் ஈடுபட்டது என்ற அணுகுண்டையும் தூக்கிப் போட்டார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுலின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த தேர்தல் ஆணையம், குற்றச்சாட்டுகள் இருப்பின் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு ராகுல் காந்தி வழங்க வேண்டும் என தெரிவித்தது. இதற்கான விளைவுகளை ராகுல் எதிர்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

’வாக்குத்திருட்டு’ என்பது இந்திய வாக்காளர்கள் மீதான தாக்குதல்..

ராகுல் காந்தியின் தொடர் குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒருவருக்கு ஒரு வாக்கு என்பது 1952ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளது.

ஒருவர் ஒரு தேர்தலில் 2 முறை வாக்களித்ததாக கூறினால் அதற்கான ஆதாரங்களை தங்களிடம் அளிப்பதுடன் எழுத்துமூலமாகவும் புகார் அளிக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்pt web

வாக்குத்திருட்டு போன்ற மோசமான வாசகங்களை பயன்படுத்தி தவறான சித்தரிப்பை ஏற்படுத்தும் முயற்சி கோடிக்கணக்கான இந்திய வாக்காளர்களையும் லட்சக்கணக்கான தேர்தல் பணியாளர்களையும் தாக்குவது போன்றது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com