'ஒரே தேசம், ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த தயார்! - தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதி

'ஒரே தேசம், ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த தயார்! - தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதி
'ஒரே தேசம், ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த தயார்! - தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதி

'ஒரே தேசம், ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த தயார் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பரில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மத்தியில் காணொலி காட்சி வாயிலாகப் பேசிய பிரதமர் மோடி, 'ஒரே தேசம் ஒரே தேர்தல்' முறையை அமல்படுத்துவது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், அடிக்கடி நடைபெறும் தேர்தல்களினால் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பதாகவும், ’ஒரே தேசம்; ஒரே தேர்தல்’ என்பது வெறும் விவாதப் பொருள் அல்ல; இப்போதைக்கான தேவை இதுவே என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  தெரிவித்துள்ளார்.  

செய்தித் தொலைகாட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், ‘’ஒரே தேசம், ஒரே தேர்தல்’ திட்டத்துக்குத் தயாராக இருக்கிறோம். இது தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட சட்ட சீர்த்திருத்தங்களை அடுத்து தேர்தல் ஆணையம் இத்திட்டத்திற்கு தயாராகவே உள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com