மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாயம் ! பந்தானா பகுதியில் மறுவாக்குப்பதிவு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 15 மணி நேரம் மாயமான பந்தானா பகுதியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
4-ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் 29-ஆம் தேதி உத்தரப்பிரதேசத்திலும் தேர்தல் நடைபெற்றது. அப்போது உத்தரப்பிரதேசத்தின் மகோபா மக்களவை தொகுதிக்குட்பட்ட பந்தானா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், தேர்தல் நடைபெற்ற சில மணி நேரத்தில் ஈவிஎம் இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகு மாயமானது.
இதனையடுத்து கிட்டத்தட்ட 15 மணி நேரம் கழித்து, மாயமான ஈவிஎம் இயந்திரத்தின் அந்த பகுதியானது அங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டது. ஈவிஎம் இயந்திரத்தின் ஒரு பகுதி மாயமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள் 4 பேர் மற்றும் 5 பாதுகாப்பு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. அதேசமயம் இந்த பகுதியில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.