வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் விவகாரம் - வெளியுறவு அமைச்சகம் பதில்

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் விவகாரம் - வெளியுறவு அமைச்சகம் பதில்
வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் விவகாரம் -  வெளியுறவு அமைச்சகம் பதில்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் வாயிலாக வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களையும் ஆன்லைன் வாயிலாக வாக்களிக்கச் செய்யும் யோசனைகளை தலைமை தேர்தல் ஆணையம் இறுதி செய்தது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. தலைமை தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு ஒப்புதல் வழங்குவதாக தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம், இவ்விவகாரம் குறித்து தேர்தல் தொடர்பான மற்ற அமைப்புகளுடனும் ஆலோசித்து இறுதி முடிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் தூதரக அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் ஆன்லைன் வழியாக வாக்குப்பதிவு செய்வது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com