மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் முற்றிலும் தோற்றுவிட்டது – கொல்கத்தா உயர்நீதிமன்றம்

மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் முற்றிலும் தோற்றுவிட்டது – கொல்கத்தா உயர்நீதிமன்றம்

மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் முற்றிலும் தோற்றுவிட்டது – கொல்கத்தா உயர்நீதிமன்றம்

மேற்கு வங்கத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்துவதில் தேர்தல் ஆணையம் முற்றிலும் தோற்றுவிட்டது என கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது  கொல்கத்தா உயர்நீதிமன்றம்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது வரை மேற்கு வங்கத்தில் 6 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் பரப்புரை கூட்டங்கள் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.பி.என். ராதாகிருஷ்ணன், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கடும் அதிருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், ‘’கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருந்தும், அதை செயல்படுத்துவதில் தேர்தல் ஆணையம் முற்றிலும் தோற்றுவிட்டது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய செயலற்ற தன்மையை அனுமதிக்க முடியாது. சுற்றறிக்கைகளை வெளியிடுவதைத் தாண்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படியொரு சுகாதார நெருக்கடியின் போது தேர்தல் ஆணையம் வெறும் பார்வையாளராக நடந்து கொண்டது ஏமாற்றமளிக்கிறது. அரசியல் கட்சியினர் பரப்புரை மேற்கொள்ளும்போதும் வாக்களிக்கும்போதும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை’’ என்று அடுக்கடுக்காக அவர் அதிருப்தி தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com