“தேர்தல்” தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு  கோரிக்கை

“தேர்தல்” தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு கோரிக்கை

“தேர்தல்” தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு கோரிக்கை
Published on

வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் பேஸ்புக்கில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் என பேஸ்புக்நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை விடுத்தது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126ஆவது பிரிவின்படி, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் தொலைக்காட்சி உள்ளிட்ட கருவிகள்மூலம் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட தடை செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்ற விளம்பரங்களை 48 மணி நேரத்துக்கு முன்னரே நிறுத்த வேண்டும் எனவும் சட்டம் உள்ளது. இந்த சட்டப்பிரிவு குறித்து ஆராய்வதற்காக தேர்தல் கமிஷன் அமைத்த சிறப்பு குழுவின் கூட்டம்
சமீபத்தில் நடந்தது. 

இந்தக் கூட்டத்தில் வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் பேஸ்புக்கில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் எனபேஸ்புக் நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை விடுத்தது. இதற்கு எந்தவித குறிப்பட்ட பதிலும் இதுவரை தெரிவிக்காத பேஸ்புக் நிறுவனம், அது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியுள்ளது. எனினும் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை தெரிவிக்க
பேஸ்புக்கில் சிறப்பு வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அதில் விதிமீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேஸ்புக் பிரதிநிதிஸ்னேஹாஷிஸ் கோஸ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com