\
வாக்கு இயந்திரம்: இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

வாக்கு இயந்திரம்: இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

வாக்கு இயந்திரம்: இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
Published on

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. தேர்தல் கமிஷன் நடத்தும் இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன. தேர்தல் ஆணையம் நடந்தும் இக்கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவின் இரு அணிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக அம்மா அணி சார்பில் தம்பிதுரை, தளவாய் சுந்தரம், வேணுகோபால் எம்.பி.ஆகியோர் பங்கேற்கின்றனர். அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் பங்கேற்க உள்ளனர். அதிமுக தவிர திமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இக்கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து பங்கேற்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com