மகாராஷ்டிரா: ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ-க்கள் உத்தவ் தாக்கரேவுடன் இணைய விருப்பம்?

மகாராஷ்டிராவில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே அணியினர் மீண்டும் உத்தவ் தாக்கரேவுடன் இணைய ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசியலில் ஆளும் கூட்டணியில் அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்களைச் சேர்த்தது, ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏக்களுக்குப் பிடிக்கவில்லை என்றும், எனவே அவர்கள் உத்தவ் தாக்கரே பக்கம் திரும்ப விரும்புவதாகவும் இதற்காக அவர்கள் தூதுவிட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக் ராவத் கூறியுள்ளார்.

இதுபோன்று மீண்டும் தங்கள் பக்கம் (உத்தவ் தாக்ரே பக்கம்) திரும்ப விரும்புபவர்களை தாங்கள் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து விரிவான தகவல்களை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Eknath Shinde - Uddhav Thackeray
2019-23: 3 கட்சி முதல்வர்களிடம் மீண்டும் மீண்டும் பொறுப்பேற்ற ஒரே துணைமுதல்வர்! #MaharashtraPolitics
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com