80 வயசு பாட்டி ஆதார் எடுத்தார்: மத்திய அமைச்சர் மகிழ்ச்சி
80 வயது பாட்டி ஆதார் அட்டை எடுக்க முன் வந்தார். அந்தப் படத்தை பதிவிட்டு மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டை கட்டாயம் வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. எல்லா திட்டங்களுக்கும் ஆதார் இணைப்பு படு வேகமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. ஆனாலும் முழுமையாக ஆதார் இன்னும் மக்களிடம் போய் சேரவில்லை. அதற்கான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது. அதில் பகிரப்படும் தகவல்கள் முறை கேடாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் விசங்கர் பிரசாத் 80 வது பாட்டி ஆதார் எடுக்க முன் வந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் எடுத்து பதிவிட்டு உள்ளார். அதில் இந்த 80 வயது மதிக்கதக்க பாட்டியால் காலை நகர்த்தவே முடியாது. ஆனாலும் அவர் ஆர்வமாக வந்து ஆதார் எடுத்திருக்கிறார். அவரது உடல்நிலையை மனதில் கொண்டு அவரது வீட்டுக்கே சென்று அதிகாரிகள் ஆதாரை எடுக்க உதவி உள்ளனர். அதுதான் டிஜிட்டல் இந்தியா என மகிழ்ந்திருக்கிறார் மத்திய அமைச்சர்.