\
பி.வி சிந்துவுக்கு விருந்தளித்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே தம்பதி

பி.வி சிந்துவுக்கு விருந்தளித்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே தம்பதி

பி.வி சிந்துவுக்கு விருந்தளித்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே தம்பதி
Published on

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்துவுக்கு இரவு விருந்து வைத்துள்ளனர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே தம்பதியினர்.

சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து. ஏற்கனவே, கடந்த 2016 இல் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பிவி சிந்து.

இரண்டுமுறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதால், சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி பி.வி சிந்துவையும் அவரது குடும்பத்தினரையும் தனது வீட்டிற்கு நேரில் அழைத்து விருந்து வைத்துப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே தம்பதியினர் மும்பையில் பி.வி சிந்துவை அழைத்து நேற்றிரவு நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்து வைத்தனர். அந்தப் புகைப்படங்களை பி.வி சிந்துவும் ரன்வீர் சிங்கும் தங்களது இஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகி வருகிறது. நடிகை தீபிகா படுகோனே தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com