\
எடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்

எடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்

எடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்
Published on

கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கர்நாடகா அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறது. ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் அளித்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம் எல் ஏக்கள் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் மும்பையில் அவர்‌கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றார். 

ஆனால் சிவகுமாரால் தங்களுக்கு ஆபத்து இருப்பதாகவும் பாதுகாப்பு கோரியும் எம் எல் ஏக்கள் ஏற்கெனவே காவல்துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். இதனால் அங்கு குவிந்திருந்த காவல்துறையினர் சிவக்குமாரை ஹோட்டலினுள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். 

இந்த நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என பாஜக நிர்வாகிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தின் முன்பாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com