இந்தியா
பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்து பேசுகிறார். இன்று மாலை 5.45 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது.
நீட் தேர்வு விவகாரம், ஹைட்ரோகார்பன் திட்டம், கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் பேசுவார் எனத் தெரிகிறது. மேலும் வர்தா புயல் நிவாரண நிதி, வறட்சி நிவாரண குறித்தும் பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்புள்ளது. முதலமைச்சர் தனது 2 நாள் டெல்லி பயணத்தில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, பியுஷ் கோயல், ரவிசங்கர் பிரசாத் ஆகியோரையும் சந்திக்கிறார். அப்போது தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரும் உடன் இருப்பார்கள் எனத் தெரிகிறது