ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மேல்முறையீட்டிற்கு அனுமதி
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மேல்முறையீடு செய்ய அமலாக்கத் துறை, சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த போது, தயாநிதி மாறன் தன் அதிகார பலத்தை பயன்படுத்தி ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்தார் என்றும் இதற்கு பிரதிபலனாக மாறன் சகோதரர்களின் சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் 742 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், மாறன் சகோதரர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.