EDFile image
இந்தியா
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக ED தகவல்
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா முன்ஜாமீன் கோரிய மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பாத்தி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ்.வி.ராஜு, மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்க்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அக்கட்சியை கொண்டு வர உள்ளதாகவும் எஸ்.வி.ராஜு தெரிவித்தார்.
arvind kejriwalpt desk
அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “மணிஷ் சிசோடியாவின் வழக்கிலேயே அக்கட்சியை சேர்க்க உள்ளீர்களா? அல்லது இரண்டும் வெவ்வேறு வழக்குகளா? இதற்கும் முறையான விளக்கமளிக்க வேண்டும்” என தெரிவித்தனர். அதன்படி, இன்றைய விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ்.வி.ராஜு விளக்கமளிக்க உள்ளார்.