பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் திடீர் ராஜினாமா!
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் பகுதி நேர உறுப்பினர் பதவியில் இருந்து சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்துள்ளார்.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில், நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் டெப்ராய் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதில் பகுதி நேர உறுப்பினர்களாக பொருளாதார நிபுணர்கள் சுர்ஜித் பல்லா, ரதின் ராய், அஷிமா கோயல், ஷமிகா ரவி ஆகியோர் இருந்தனர்.
இந்நிலையில் பகுதி நேர உறுப்பினர் பதவியில் இருந்து பிரபல பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த 1 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் பகுதிநேர உறுப்பினர் பதவியில் இருந்து டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து விலகிவிட்டேன் என தெரிவித்து உள்ளார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்த மறுநாளே இவரும் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.