கேரள வெள்ளத்தால் பொருளாதார வளர்ச்சி குறைவு?

கேரள வெள்ளத்தால் பொருளாதார வளர்ச்சி குறைவு?

கேரள வெள்ளத்தால் பொருளாதார வளர்ச்சி குறைவு?
Published on

கேரளாவில் வெள்ள பாதிப்புகளால் அம்மாநி‌லத்தின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவிகித அ‌ளவுக்கு குறையும் என கணிப்பு வெளியாகியுள்ளது. கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் இம்மதிப்பீட்டை வெளியிட்டுள்‌ளது.

சுற்றுலா‌, விருந்தோம்பல், தோட்டப்பயிர் துறைகளில் பெரும் பாதிப்பு இருக்கும் என்றும் கொச்சி பகுதி தொழிற்சாலைகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்றும் அக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலைகள் அரித்துச் செ‌ல்லப்பட்டதால் 12 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பும் கொச்சி விமான நிலைய பாதிப்பால் 40 கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை பாதிக்கப்படும் என அக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கேரளாவின் ஒட்டுமொத்த வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் 60%, ஓணம் சமயத்தில் ம‌ட்டும் நடப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர முற்றிலும் இடிந்த மற்றும் சேதமடைந்த வீடுகளை கட்டவும் சீரமைக்கவும் 50 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து ‌ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை செலவாக வாய்ப்பிருப்பதாகவும் கேர் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com