நாட்டில் 83% வரை ரொக்கப் பணப்புழக்கம் அதிகரித்திருப்பு.. காரணம் என்ன? நிபுணர்கள் விளக்கம்

நாட்டில் 83% வரை ரொக்கப் பணப்புழக்கம் அதிகரித்திருப்பு.. காரணம் என்ன? நிபுணர்கள் விளக்கம்

நாட்டில் 83% வரை ரொக்கப் பணப்புழக்கம் அதிகரித்திருப்பு.. காரணம் என்ன? நிபுணர்கள் விளக்கம்

நாட்டில் 83% வரை ரொக்கப்பணப்புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியே அதற்கு காரணம் எனவும், பொருளாதார நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

பொருளாதார வளர்ச்சியே நாட்டில் புழக்கத்தில் உள்ள ரொக்கப்பணத்தின் மதிப்பு, கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிக்க காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 23ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் 32.34 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. பணமதிப்பு நீக்கத்தின் போது இருந்ததை விட இது 83% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ரொக்கப்பணப்புழக்கத்தை குறைப்பதும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஒரு நோக்கமாக கூறப்பட்டது.

இந்நிலையில் பணமதிப்பு நீக்கத்திற்கு பின்பும் பணப்புழக்கம் அதிகரித்திருப்பதற்கு பொருளாதார வளர்ச்சியே காரணம் என பொருளாதார நிபுணரும், இந்திய தணிக்கையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான வேத் ஜெயின் தெரிவித்துள்ளார். மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பணப்புழக்கத்திற்கும் எப்போதும் நேரடி தொடர்பு இருக்கும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதே கருத்தை இன்ஃபோமரிக்ஸ் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் மனோஜ் சர்மாவும் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com