அனைத்து ரயில் நிலையங்களிலும் இனி மண்கோப்பைகளில்தான் தேநீர்: பியூஷ் கோயல்

அனைத்து ரயில் நிலையங்களிலும் இனி மண்கோப்பைகளில்தான் தேநீர்: பியூஷ் கோயல்
அனைத்து ரயில் நிலையங்களிலும் இனி மண்கோப்பைகளில்தான் தேநீர்: பியூஷ் கோயல்

நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதிலாக சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத மண்பாண்ட கோப்பைகளிலேயே இனி தேநீர் விற்பனை செய்யப்படும் என்று  மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

வடமேற்கு ரயில்வேயின் கீழ் புதிதாக மின்மயமாக்கப்பட்ட திகாவாரா-பாண்டிகுய் பிரிவின் தொடக்க விழாவிற்காக ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள திகாவாரா  ரயில் நிலையத்தில்  ஏற்பாடு  செய்யப்பட்ட  நிகழ்ச்சியில்  பேசிய அமைச்சர் பியூஷ் கோயல் “ இந்த முயற்சி பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவுக்கு ரயில்வேயின் பங்களிப்பாக இருக்கும். நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 400 ரயில் நிலையங்களில் தேநீர் 'மண்கோப்பைகளில்' வழங்கப்படுகிறது, எதிர்காலத்தில், நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மண்கோப்பைகளில் மட்டுமே தேநீர் விற்பனை செய்யப்படும் என்பது எங்கள் திட்டமாகும்"என்று அவர் கூறினார்.

மண்கோப்பைகள் சுற்றுச்சூழலைக் காக்கின்றன, மேலும் லட்சக்கணக்கான மக்கள்  இதன் மூலமாக வேலைவாய்ப்பையும் பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com