இந்தியா
பணம் கொடுத்தால் 5 வருடம் தடை: தேர்தல் ஆணையம் முயற்சி
பணம் கொடுத்தால் 5 வருடம் தடை: தேர்தல் ஆணையம் முயற்சி
வாக்குக்குப் பணம் கொடுக்க முயலும் வேட்பாளர்களை 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறு மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படும் வேட்பாளர்களுக்கு தடை விதிக்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. வாக்காளர்களைக் கவர, கட்சிகள் பணம் கொடுத்தால் அந்த தேர்தலை நேரடியாக ரத்து செய்யும் அதிகாரித்தை வழங்குமாறு மத்திய அரசிடம் ஏற்கனவே தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.