சுரங்க ஒப்பந்தத்தில் முறைகேடு: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சுரங்க ஒப்பந்தத்தில் முறைகேடு: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
சுரங்க ஒப்பந்தத்தில் முறைகேடு: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அரசு சுரங்க ஒப்பந்தத்தில் தனக்கு ஆதரவான முறையில் செயல்பட்டது தொடர்பான புகாரில் உங்கள் மீது ஏன் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க கூடாது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக கடந்த வாரம் மாநில தலைமைச் செயலாளர் அனுப்பிய ஆவணங்களை சரிபார்த்து தேர்தல் ஆணையம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசுக்கு பதிலளிக்க ஹேமந்த் சோரனுக்கு மே 10 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. "மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 9ஏ இன் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. முதல்வர் விரும்பினால் தேர்தல் ஆணையத்தால் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தப்படும்" என்று தேர்தல் ஆணைய அதிகாரி கூறினார்.தற்போது முதல்வர் சோரன் தனது தாயின் உடல்நலப் பரிசோதனைக்காக ஹைதராபாத்தில் இருக்கிறார், இந்த நோட்டீஸ் தொடர்பாக அவரது தரப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. 2019 டிசம்பரில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி ஜார்கண்டில் ஆட்சி அமைத்தது.  

சுரங்க ஒப்பந்த லாப விவகாரத்தை முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் இந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி எழுப்பினார். தற்போதைய சட்டமன்றக் கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி தலைமையிலான பாஜக குழு பிப்ரவரி 11 அன்று ஆளுநரை சந்தித்து, தகுதி நீக்கம் மற்றும் ஹேமந்த் சோரனை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரிக்கை வைத்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com