இன்று பிற்பகலில் குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு
குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 1 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி ஒரே நாளில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இமாச்சலப் பிரதேசத்துக்கு மட்டுமே தேர்தல் தேதியை அறிவித்துவிட்டு குஜராத் மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்காதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குஜராத்தில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான மீட்புப் பணிகள் நிறைவடையாத காரணத்தால், தேர்தலை சிறிது காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என குஜராத் அரசு கோரிக்கை வைத்ததையடுத்து தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
இதனிடையே குஜராத்தில் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்காகவே தேர்தல் தேதி தாமதப்படுத்தப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில் குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 1 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.