இந்தியா
உணவகங்களில் ஜி.எஸ்.டி வரி குறைப்பு அமல்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
உணவகங்களில் ஜி.எஸ்.டி வரி குறைப்பு அமல்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
உணவகங்களுக்கான ஜி.எஸ்.டி வரி விதிப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் இன்று அமலுக்கு வந்த நிலையில் டெல்லியில் உணவக வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமலுக்கு வந்த போது குளிர் சாதன வசதி இல்லாத உணவகங்களில் 12 சதவீதமும், குளிர் சாதன வசதி உடைய உணவகங்களில் 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டது. அந்த வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதால் உணவுகளின் விலைகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு பிறகு இட்லியின் விலை 19 ரூபாய் வரை உயர்ந்த நிலையில் தற்போது 15 ரூபாயாக குறைந்துள்ளது. தோசை ஒன்றின் விலை 62 ரூபாயாக எகிறிய நிலையில் தற்போது 55 ரூபாயாக குறைந்துள்ளது. இதே போன்று அனைத்து உணவுகளின் விலையும் குறைந்துள்ளது.