\
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Published on

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று மாலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவிசார் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அந்தமானில் இன்று மாலை 5 மணியளவில் போர்ட் பிளேர் நகருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 அலகுகளாக பதிவானதாக, இந்திய புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கதையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com