\
சிறையில் உள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு ரகசிய பரோல்?

சிறையில் உள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு ரகசிய பரோல்?

சிறையில் உள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு ரகசிய பரோல்?
Published on

பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேரா சச்சா சவ்தா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு கடந்த அக்டோபர் 24 அன்று ஹரியானா மாநில அரசு ரகசிய பரோல் வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. 

நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவனமையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை அவர் பார்க்க இந்த ஒரு நாள் பரோலுக்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் அனுமதி கொடுத்துள்ளார். 

அதன்படி கடந்த 24ஆம் தேதி அன்று சுநாரியா சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் குருகிராமில் அவரது தாயார் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

அங்கு நாள் முழுவதும் தாயாருடன் பொழுதை செலவிட்ட அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல்வர் மற்றும் சில அரசு அதிகாரிகள் மட்டுமே இது குறித்து அறிந்திருந்ததாக சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com