போலீசை கட்டிப்பிடித்து நடுரோட்டில் முத்தம்: போதை பெண் மீது வழக்கு!
போதையில் கார் ஓட்டி வந்த பெண், காரை மறித்த போலீசுக்கு லஞ்சமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்தவர், 30 வயதுள்ள பெண் ஒருவர். இவர் தனது தோழி மற்றும் ஆண் நண்பர் ஒருவருடன் புதன்கிழமை இரவு பார் ஒன்றுக்குச் சென்றார். அங்கு மூவரும் நள்ளிரவு வரை மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறியுள்ளது. இருந்தும் அப்படியே காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினர். பைபாஸ் சாலையில் வரும்போது, கார் தள்ளாடியபடி சென்றதை பலர் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் கார், சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியிருக்கிறது. இதையடுத்து அங்கிருந்த டாக்சி டிரைவர் உதவியிருக்கிறார். பிறகு இந்தச் சம்பவம் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு போலீஸ்காரர்கள் வந்துள்ளனர். காரில் இருந்தவர்களை இறங்கச் சொல்லிவிட்டு வழக்கம் போல, ’போதையா?’, ‘லைசென்ஸ் இருக்கா?’ என்ற லெவலில் பேச, போதைப் பெண்ணுக்குத் தோன்றியது திடீர் ஐடியா. போலீசுக்கு லஞ்சம் கொடுக்க நினைத்தார். ஆனால் பணமாக அல்ல.
ஓடிப்போய் டிராபிக் போலீசை இறுகக் கட்டியணைத்து முத்த மழை கொடுக்க ஆரம்பித்துவிட்டார். இதை அந்த போலீஸ்காரர் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பெண்ணின் பிடியில் இருந்து அவரால் தப்பிக்க முடியாமல் திக்குமுக்காடி போனார். அருகில் இருந்த மற்ற போலீஸ்காரர் அந்த பெண்ணிடம் இருந்து தனது நண்பரை போராடி மீட்டுள்ளார். பிறகு போதையில் வந்தவர்களை பிதாநகர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
‘அந்த முத்ததை மறக்கவே முடியவில்லை’ என்கிறார் பாதிக்கப்பட்ட டிராபிக் போலீஸ்!