இந்தியா
ஆட்டை வெட்டுவதற்கு பதிலாக ஆளை வெட்டிய நபர் - ஆந்திராவில் அதிர்ச்சி
ஆட்டை வெட்டுவதற்கு பதிலாக ஆளை வெட்டிய நபர் - ஆந்திராவில் அதிர்ச்சி
பலி கொடுக்கும் நிகழ்வில் ஆட்டை வெட்டுவதற்கு பதிலாக ஆட்டை பிடித்திருந்த இளைஞரின் தலையை வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் வலசப்பள்ளி கிராமத்தில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவையொட்டி, கிராம தேவைக்கு ஆடு பலிகொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சுரேஷ் என்பவர் ஆட்டின் தலையை பிடித்துக் கொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்த சலபதி என்பவர் தவறுதலாக சுரேஷின் தலையை வெட்டியுள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சுரேஷ் உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், சலபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.