’பிறந்த குழந்தையுடன் கொடைக்கானல் டூர்’: மருத்துவமனையில் போதை கணவன் கைது!

’பிறந்த குழந்தையுடன் கொடைக்கானல் டூர்’: மருத்துவமனையில் போதை கணவன் கைது!

’பிறந்த குழந்தையுடன் கொடைக்கானல் டூர்’: மருத்துவமனையில் போதை கணவன் கைது!
Published on

குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு கொடைக்கானல் டூர் செல்ல வேண்டும் என்று மருத்துவமனையில் தகராறு செய்த போதை கணவரை போலீசார் கைது செய்தனர்.

மூணாறு அருகில் உள்ள சந்துவாரே கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் தாமன்ஸ். இவர் மனைவிக்கு அதிமலி தாலுகா மருத்துவமனையில் நேற்று குழந்தை பிறந்தது. மகிழ்ச்சி அடைந்த நவீன், தான் அப்பா ஆனதை நண்பன் செல்வாவிடம் சொன்னார். அவர் பார்ட்டி கேட்டார். இருவரும் மதுக்கடைக்கு சென்று நன்றாகக் குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில், நேராக மருத்துவமனைக்கு வந்தனர். 

போதையில் இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் அவர்களை உள்ளே அனுப்ப வில்லை. பிறகு ’பிறந்த குழந்தையையும் என் மனைவியையும் கொடைக்கானல் அழைத்துச் செல்ல வேண்டும், என்னை அனுமதியுங்கள்’ என்றார். ’குழந்தை பிறந்து சில மணி நேரம்தான் ஆகிறது. அதற்குள் எப்படி அனுப்ப முடியும்?’ என்று அங்கிருந்தவர்கள் கூறினர். போதையில் உளறுகி றார் என்றுதான் அவர்கள் முதலில் நினைத்தனர். 

ஆனால், நவீன் தொடர்ந்து அவர்களை டார்ச்சர் செய்து தகராறில் ஈடுபட்டதால், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்தும் தகராறில் ஈடுபட்ட நவீன் மற்றும் அவர் நண்பர் செல்வாவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com