குடிபோதையில், உயிருள்ள விஷப்பாம்பை விழுங்கிய தொழிலாளி நான்கு மணி நேரத்துக்குப் பின் மரணமடைந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகிபால் சிங் (40). கூலித் தொழிலாளி. இவர் குடி போதையில் சாலையில் கிடந்த சிறு பாம்பை கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரிடம் அப்படி செய், இப்படி செய் என்று தூண்டிக்கொண்டே இருந்தனர். போதையில் இருந்ததால் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டார், சிங்.
இதை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்தனர். பின்னர் ’அதை வாயில போடு பார்ப்போம்’ என்று யாரோ சிலர் சொல்ல, அப்படியே போட்டார் சிங். பாம்பு உள்ளே சென்றுவிட்டது. அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது போல தோன்ற, குனிந்து வாந்தி எடுத்தார். ஆனால் பாம்பு வெளியே வரவில்லை. அது வயிற்றுக்குள் சென்றுவிட்டது. பிறகு அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். நான்கு மணி நேரம் கழித்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

