இந்தியா
தன்னைக் கடித்த பாம்பை துண்டு துண்டாகக் குதறிய போதை இளைஞர், சீரியஸ்!
தன்னைக் கடித்த பாம்பை துண்டு துண்டாகக் குதறிய போதை இளைஞர், சீரியஸ்!
தன்னை கொத்திய விஷப் பாம்பை, கடித்து துண்டு துண்டாக்கிய இளைஞர் மருத்துவ மனையில் கவலைக்கிடமாக உள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் உள்ள அஸ்ரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நேற்று மது போதையில் தனது வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்குள் விஷப் பாம்பு ஒன்று நுழைந்தது. ராஜ்குமாரை அந்தப் பாம்பு திடீரென்று கடித்தது. ஆவேசமடைந்த அவர், தன்னைக் கடித்த பாம்பை, கையால் பிடித்தார். பின்னர் போதையில் பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்து எறிந்தார்.
பின்னர் பாம்பின் நச்சு, ரத்தத்தில் கலந்ததால் மயங்கினார் ராஜ்குமார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். கவலைக்கிடமாக உள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.