\
காவலரின் வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞர்

காவலரின் வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞர்

காவலரின் வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞர்
Published on

கர்நாடகாவில் மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர், காவல்துறையினரின் வாகனத்தை எடுத்து ஓட்டியதால் பதற்றம் ஏற்பட்டது. 

கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் மதுபோதையில் இருந்த இளைஞர், போக்குவரத்து காவல்து‌றையினரின் தொப்பியை அணிந்துகொண்டு காவலரின் வாகனத்தை எடுத்து ஓட்டினார். உடனடியாக காவல்துறையினர் அவரை பின்தொடர்ந்துச் ‌சென்று வாகனத்தை மீட்டனர்.

ஹாசன் பகுதியைச் சேர்ந்த காவலர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சாவியை எடுக்காமல் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இளைஞர் ஒருவர், காவலரின் இருசக்கர வாகனத்தை எடுத்து ஓட்டிச் செல்ல ஆரம்பித்தார். இதனை பார்த்து பதறிய சக காவலர்கள், இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தேடுதலில் ஈடுபட்ட அதிகாரிகள், அந்த இளைஞரை பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவன் பெயர் போபா என்பது தெரியவந்தது. மதுபோதையில் இவ்வாறு அவர் செய்ததும் தெரியவந்தது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com