\
மனைவியின் காதலை சந்தேகித்த கணவன் : விபரீத சோதனை முடிவால் நேர்ந்த விபத்து

மனைவியின் காதலை சந்தேகித்த கணவன் : விபரீத சோதனை முடிவால் நேர்ந்த விபத்து

மனைவியின் காதலை சந்தேகித்த கணவன் : விபரீத சோதனை முடிவால் நேர்ந்த விபத்து
Published on: 

மனைவியின் காதலை சோதனை செய்ய கணவன் நடுரோட்டில் நின்றபோது, வேன் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் சீனாவில் அறங்கேறியுள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த பான் என்பவர் அவரது மனைவி சவ்வின் காதல் எந்த அளவிற்கு உண்மையானது என்பதை அறிந்துகொள்ள ஒரு விபரீத முறையை கையாண்டார். 

அதாவது வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும் சாலையின் நடுவே நின்று கொண்டு மனைவி தன்னை காப்பாற்ற வருவாளா என்று பான் சோதனை செய்துள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. பானின் செயலை கண்ட அவரது மனைவி பலமுறை பான் - ஐ சாலையிலிருந்து இழுத்து கொண்டு ஓரத்திற்கு வருகிறார். ஆனால் அவர் மனைவியின் கையை உதறிக்கொண்டு மீண்டும் சாலையின் நடுவே செல்கிறார்.

ஒரு கட்டத்தில் மனைவியால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் மனைவி சவ் ஓரமாக போய் நின்று விட்டார். அப்போது அங்கு வேகமாக வந்த இரண்டு வாகனங்கள் பானின்மீது மோதுவது போல் வந்து சுதாரித்து கொண்டு பின்னர் ஓரமாக சென்றது. ஆனால் ஒரு வேன் வேகமாக வந்து பானின் மீது மோதியது. இதில் பான் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவருக்கு மார்பு எழும்பு முறிவடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சீனாவில் ஜெஜியாங்கில் லிஷூ என்ற சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் சுமார் 40 நிமிடங்கள் பதிவாகியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com