போதையில் டிரைவர் ஓட்டிய கார் மோதி 7 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ

போதையில் டிரைவர் ஓட்டிய கார் மோதி 7 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ
போதையில் டிரைவர் ஓட்டிய கார் மோதி 7 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ

பெங்களூருவில் மதுபோதையில் காரை ஓட்டிவந்தவர், சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 7 பேர் படுகா யம் அடைந்தனர். 

பெங்களூருவில் உள்ள ஹெச்எஸ்ஆர் லேவுட் பகுதியில் உள்ள ரெஸ்டாரண்டில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் சிலர் நடைபாதையில் நின்று சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சிலர் தேநீர் அருந்தியபடி இருந்தனர். அப்போது அசுர வேகத்தில் வந்த ஒரு கார், ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மோதி தள்ளியபடி, நடைபாதை மீதேறியது. இதில் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் உட்பட 7 பேர் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள், உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், கார் ஓட்டுநரை பிடித்தனர். அவர் பெயர் ராஜேந்திரா என்பதும் மது போதையில் காரை ஓட்டி வந்ததால் கட்டுப் பாட் டை இழந்து விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசிடம் அவரை ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. 

நடைபாதை மீது தறிகெட்டு வரும் கார், நின்றிருந்தவர்கள் மீது மோதும் அதிர்ச்சிக் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமரா வில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com