\
போதையில் டிரைவிங்: அதிகரித்தது அபராதம்

போதையில் டிரைவிங்: அதிகரித்தது அபராதம்

போதையில் டிரைவிங்: அதிகரித்தது அபராதம்
Published on

போதையில் வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான சட்ட விதிமுறைகளில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மசோதா தொடர்பாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட 20–க்கும் மேற்பட்ட திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த திருத்த மசோதா, மோட்டார் வாகன விதிகளை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்க வகை செய்கிறது.

அதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து பத்தாயிரம் ரூபாயும் ஆகவும் ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்றால் விதிக்கப்படும் அபராதம் நூறு ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடாமல் சென்றால் பத்தாயிரம் ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்க வகை செய்யும் புதிய அம்சமும் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com