எண்ணெய் ஆலைகள் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு

எண்ணெய் ஆலைகள் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு
எண்ணெய் ஆலைகள் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு

சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், சர்வதேச வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 20 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளது.

சர்வதேச அளவில் சவுதி அரேபியாவிலிருந்துதான் அதிகளவு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும், உலகின் மற்ற நாடுகளுக்கு சவுதி அரேபியாவிலிருந்து 98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த எண்ணெய் வள நாடுகளின் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அவுதி அரேபியாவிலிருந்துதான் நடைபெறுகிறது. குறிப்பாக, சவுதியிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் இந்தியாவும் ஒன்று. 

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய கச்சா உற்பத்தி ஆலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், உற்பத்தி பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை கடுமையா உயர வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 67 டாலராக உள்ள நிலையில், இன்று வர்த்தகத்தில் 80 டாலர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com