பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்..!
பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி விவாதித்தார். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் உடனிருந்தார்.
அப்போது எல்லை மாநிலங்களில் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இன்று காலை தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார்
பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்புரில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்ததாக ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. வியாழன்போன்று நேற்றிரவும் பாகிஸ்தான் அலையலையாக நூற்றுக்கணக்கான ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியது.
ஜம்மு, ஸ்ரீநகர், பாரமுல்லா, பதான்கோட், ஃபிரோஸ்புர் உள்ளிட்ட 26 இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இவற்றை இந்தியப் படைகள் எதிர்கொண்டு வீழ்த்தியதாக ANi செய்தி செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், பஞ்சாப்பில் உள்ள ஃபிரோஸ்புரில், சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனின் பாகங்கள் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயம் அடைந்தனர். அதில், ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாக அம்மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.