ஹரியானா| காருடன் போக்குவரத்து காவலரை இழுத்து சென்ற போதை ஓட்டுநர் - பதைபதைக்கும் காட்சிகள்!

ஹரியானாவில் வாகன சோதனையின் போது குடிபோதையில் இருந்த ஓட்டுநர், காருடன் போக்குவரத்து காவலரை இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா
ஹரியானாபுதிய தலைமுறை

ஹரியானாவில் வாகன சோதனையின் போது குடிபோதையில் இருந்த ஓட்டுநர், காருடன் போக்குவரத்து காவலரை இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபரீதாபாத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் போக்குவரத்து காவலர் ஒருவர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர், ஓட்டுநரிடம் ஆவணங்களை கேட்டுள்ளார். மதுபோதையில் ஓட்டுநர் இருந்ததை அறிந்த காவலர், அபராதம் விதிக்க முயன்றதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஹரியானா
கேரளா|சொந்த சைக்கிளுடன், அமைச்சர் கொடுத்ததும் காணாமல் போனதால் மாணவி விரக்தி; இறுதியில்நடந்த ட்விஸ்ட்

அப்போது திடீரென ஓட்டுநர் காரை இயக்கியதால், சில மீட்டர் தூரத்துக்கு காரின் கதவில் தொங்கிய படியே போக்குவரத்து காவலர் இழுத்து செல்லப்பட்டார். இதைக்கண்ட பிற வாகன ஒட்டிகள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் காரை மடக்கிப் பிடித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com