தருமபுரி சாலை விபத்து: கனரக லாரி ஓட்டுநர் கைது!

தருமபுரி சாலை விபத்து: கனரக லாரி ஓட்டுநர் கைது!

தருமபுரி சாலை விபத்து: கனரக லாரி ஓட்டுநர் கைது!
Published on

தருமபுரியில் 4 பேரின் உயிரைப் பறித்த தொப்பூர் நெடுஞ்சாலை விபத்தில், தப்பியோடிய கனரக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில் வந்த கனரக லாரியால் நிகழ்ந்த விபத்து பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் தொப்பூர் கண்வாய் சரிவுப்பாதையில் இருசக்கர வாகனம் மற்றும் மினிலாரி மோதி சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளன. அப்போது சிமெண்ட் மூட்டைகளுடன் வேகமாக வந்த கனரக லாரி ஒன்று அணிவகுந்து நின்ற வாகனங்கள் மீது அதேவேகத்தில் மோதியது.

அப்பகுதி சரிவான சாலை என்பதால் 12 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது. சுமார் 5 கார்கள் நொருங்கி பெரியளவில் சேதமாயின. இதனால் காரில் இருந்தவர்கள் அலறிய நிலையில், அங்கிருந்த வாகன ஓட்டிகள் காயத்துடன் காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டர். சிறிது நேரத்தில் மீட்பு குழுவினரும் அங்கு விரைந்தனர். அப்போது 3 பேர் நிகழ்விடத்திலேயே சடலமாக மீட்கப்பட்டனர். பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு 4ஆக அதிகரித்தது.

இந்த கோர விபத்துக்கு காரணமான கனரக லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர். போலீஸார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இறுதியாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com