பசு பாதுகாப்பு தூதர் ஆனார் ஹேமமாலினி!

பசு பாதுகாப்பு தூதர் ஆனார் ஹேமமாலினி!

பசு பாதுகாப்பு தூதர் ஆனார் ஹேமமாலினி!
Published on

உத்தரப்பிரதேச அரசின் பசு பாதுகாப்பு அமைப்பின் தூதராக நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி நியமிக்கப்பட்டுள்ளார். 

உத்தரபிரதேச அரசு பசுக்களை பாதுகாக்க ‘கவ் சேவா ஆயோக்’ (Gau Seva Aayog)என்ற பசு பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. தனி அதிகாரம் கொண்ட அமைப்பான இதற்கு மாநில பட்ஜெட்டில் ரூ.647 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பிரசார தூதராக நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.யுமான ஹேமமாலினியை மாநில அரசு நியமனம் செய்துள்ளது.

இதையடுத்து பசு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஹேமமாலினி ஈடுபடுவார். இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்ட நடிகை ஹேமமாலினி பசுபாதுகாப்பு தொடர்பாகவும், விழிப்புணர்வு தொடர்பாகவும் தனது திட்டங்களை பசு பாதுகாப்பு அமைப்பின் தலைவருக்கு கடிதமாக எழுதி அனுப்பி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com