பீரங்கிகளை தகர்க்கும் ஏவுகணை சோதனை வெற்றி !

பீரங்கிகளை தகர்க்கும் ஏவுகணை சோதனை வெற்றி !

பீரங்கிகளை தகர்க்கும் ஏவுகணை சோதனை வெற்றி !
Published on

எதிரிகளின் பீரங்கிகளை தகர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஏவுகணை சோதனையை இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகரில் உள்ள இந்திய ஆயுதங்கள் மையத்தில் இருந்து MBT அர்ஜூன் டாங்கியில் பொருத்தி‌ அந்த ஏவுகணை சோதிக்கப்பட்டது. முன்னோட்டமாக மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இலக்கு நிர்ணயித்து ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. இதில்,‌ ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரி‌வித்தனர்.

லேசர் தொழில்நுட்பத்துடன் இந்த டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை டிஆர்டிஒ உருவாக்கியுள்ளது‌. பரிசோதனை வெற்றிக‌ரமாக முடிந்ததை அடு‌த்து, டிஆர்டிஒ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்‌ளார். வருங்காலத்தில் முக்கியமான ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை டிஆர்டிஒ விஞ்ஞானிகள் குறைத்துள்ளனர் என்றும், டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை உருவாக்கியிருப்‌பது பெருமைக்குரியது என்றும் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com