குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரெளபதி முர்முவுக்கு 2,824 வாக்குகள் கிடைத்திருப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். குடியரசுத் தலைவராக 5,28,491 மதிப்பு வாக்குகளே தேவை என்ற நிலையில் திரெளபதி முர்முவுக்கு 6,76,803 மதிப்பு வாக்குகள் கிடைத்துள்ளது.