\
இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ கே.கே.அகர்வால் கொரோனாவால் மரணம்

இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ கே.கே.அகர்வால் கொரோனாவால் மரணம்

இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ கே.கே.அகர்வால் கொரோனாவால் மரணம்
Published on

பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் (.எம்.) முன்னாள் தேசியத் தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

.எம். முன்னாள் தலைவரான டாக்டர் கே.கே.அகர்வால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார். அவர் கடந்த சில நாட்களாக எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.

கொரோனா முதல் அலையின்போது கொரோனா வைரஸ் மற்றும் கருப்பு பூஞ்சை தொற்று தொடர்பாக, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்ட கே.கே.அகர்வால், ஏராளமான வீடியோக்கள் வெளியிட்டதுடன், பல கட்டுரைகளையும் எழுதினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com